ADDED : மே 28, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : சேத்தியாத்தோப்பில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மண்டல பொறுப்பாளர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். கீரப்பாளையம் ஒன்றிய அமைப்பாளர் கவியரசன் வரவேற்றார். புவனகிரி ஒன்றிய அமைப்பாளர் வினோத்கண்ணன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் ஆதவன், புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். மண்டல சூழலியல் அமைப்பாளர் செல்வ வீரத்தமிழன் வாழ்த்துரை வழங்கினார். இதில், கிராமப்புற பொருளாதார மேம்பாடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, குழந்தைகளுக்கான கல்வி கட்டமைப்பை மேம்படுத்தல், கலை மற்றும் கலாசார மேம்பாடு குறித்து விவரித்தனர்.
புவனகிரி ஒன்றிய பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.