ADDED : செப் 08, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: பண்ருட்டி அடுத்த காட்டுகூடலூரில் டாஸ்மாக் மதுபான கடை அருகே, பங்க் கடையில் மதுபானங்கள் விற்பதாக பண்ருட்டி கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் அருகே உள்ள பெட்டிக்கடையில் மொத்தமாக டாஸ்மாக் மதுபானங்கள் வாங்கி வந்து விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்து, பார் நடத்திவந்த காட்டுகூடலுாரை சேர்ந்த ராஜேந்திரன், 56: என்பவரை கைது செய்தனர்.