/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முருங்கப்பாக்கம் சக்ராலயாவில் டாடா புதிய ரக கார்கள் அறிமுகம்
/
முருங்கப்பாக்கம் சக்ராலயாவில் டாடா புதிய ரக கார்கள் அறிமுகம்
முருங்கப்பாக்கம் சக்ராலயாவில் டாடா புதிய ரக கார்கள் அறிமுகம்
முருங்கப்பாக்கம் சக்ராலயாவில் டாடா புதிய ரக கார்கள் அறிமுகம்
ADDED : ஆக 25, 2024 05:27 AM

கடலுார்: புதுச்சேரி, முருங்கப்பாக்கம் டாடா சக்ராலயா மோட்டார்ஸ் நிறுவனத்தில், புதிய ரக 'டாடா கர்வ்' டீசல் மற்றும் எலக்ட்ரிக் கார் அறிமுக விழா நடந்தது.
விழாவிற்கு சக்ராலயா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் துரைராஜ் மற்றும் கோமதி துரைராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினர். டாடா நிறுவன தலைமை அதிகாரி ஜாகிர் உசேன், புதுச்சேரி கிளை பொதுமேலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., சம்பத், புதிய கார்களை அறிமுகம் செய்து வைத்தார்.
புதிய ரக கார்கள் 1.5 லிட்டர் கிரையோட்ஜெட் (டீசல்), 1.2 லிட்டர் ரெவட்ரான் (பெட்ரோல்), 1.2 லிட்டர் ஹைபர்சன் ஜி.டி.ஐ., (பெட்ரோல்) மற்றும் கர்வ் பேட்டரி வாகனம் ஆகிய நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பேட்டரி வாகனம் 99 பி.எஸ்., பவர் மற்றும் 250நியூட்டரிக் மீட்டர் சக்தி கொண்டது. இந்த கார் அறிமுக விலை ரூ. 17.49 லட்சம் ஆகும்.
வாகனத்தின் சிறப்பு அம்சங்களாக, சுமால் யூட்டிலிட்ட வாகன வடிவம், 360 டிகிரி கேமிரா மற்றும் ஆர்.18 அலாய் வீல், 12.3 அங்குல பொழுதுபோக்கு தகவல் கருவி, 6 வழி பவர் அட்ஜெஸ்டபிள் டிரைவர் மற்றும் மற்றொரு இருக்கை உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் உள்ளது.
விழாவில் பொது மேலாளர்கள் ஜெயக்குமார், வசந்தராஜ், விற்பனை பிரிவு பொது மேலாளர் கணேசன், துணை பொது மேலாளர்கள் சோழன், சந்தோஷ், டாட்டா ட்ரெய்னர் சத்ய நாராயணன், மணிகண்டன், வாடிக்கையாளர் சேவை மேலாளர் திவ்யா, வங்கி மற்றும் காப்பீடு நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

