/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாரஸ் லாரி திடீர் பழுது கடலுாரில் 'டிராபிக் ஜாம்'
/
டாரஸ் லாரி திடீர் பழுது கடலுாரில் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஜூலை 09, 2024 05:48 AM

கடலுார் : கடலுார் ஜவான்ஸ்பவன் சிக்னல் அருகில் செம்மண் கிராவல் ஏற்றி வந்த டாரஸ் லாரி திடீரென பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதித்தது.
நடுவீரப்பட்டு போலீசார் கடந்த 30ம் தேதி, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விலங்கல்பட்டு குழந்தைகுப்பத்தில் இருந்து 6 டாரஸ் லாரிகளில் அனுமதியின்றி ஏற்றி வந்த செம்மண் கிராவலை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்து, 6 டாரஸ் லாரி, 1 புல்டோசரை பறிமுதல் செய்தனர். செம்மணல் கிராவலுடன் டாரஸ் லாரிகள் கடலுார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க நேற்று கொண்டு வரப்பட்டது.
இதில், ஒரு டாரஸ் லாரி அண்ணா பாலம் சிக்னல் அருகில் ஜவான்ஸ்பவனையொட்டி மாலை 4:30 மணிக்கு வந்த போது, திடீரென பழுதாகி நின்றது. போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர். அதனைத் தொடர்ந்து, ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக டாரஸ் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 5:15 மணி வரை 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.