/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள்: மாஜி., எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
/
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள்: மாஜி., எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள்: மாஜி., எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள்: மாஜி., எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : ஏப் 12, 2024 04:46 AM

பண்ருட்டி : பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., விற்கு, தேர்தலில் பாடம் புகட்டுங்கள் என, முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் பேசினார்.
கடலுார் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பண்ருட்டி நகரம், சீரங்குப்பம், ஆண்டிக்குப்பம், சாத்திப்பட்டு, அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியம் நரிமேடு, எழுமேடு, அகரம், சன்னியாசிபேட்டை, சித்தரசூர், நத்தம், பாலுார், பல்லவராயநத்தம், கீழ்அருங்குணம், எய்தனுார் மற்றும் நெல்லிக்குப்பம் நகர பகுதிகளில் நடந்த பிரசாரங்களில் அவர் பேசியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் செய்ய முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சிக்கு வந்து 3 ஆண்டாகியும் எந்த திட்டங்களும் மக்களுக்கு செய்யவில்லை. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கூற முடியாமல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
கோவை தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பொங்கலுார் அருகே பிரசாரம் செய்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜியிடம், மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என, பெண் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் தேர்தல் முடிந்ததும் வரும் என்றார்.
அருகில் இருந்த மற்றொரு பெண், தேர்தல் முடிந்ததும் இவங்களே வரமாட்டாங்க என்றார். மக்கள் ஏளனம் செய்யும் அளவிற்கு தி.மு.க., அரசின் நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் இதுதான் தி.மு.க., கூட்டணியின் நிலை.
ஜெயலலிதா ஆட்சியில் வீட்டிற்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கினார். மின் கட்டணமும் குறைவாக இருந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் மாதம் தோறும் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்ததும் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திவிட்டனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் டிகிரி படித்த பெண்களுக்கு திருமண உதவிதொகை ரூ.50 ஆயிரம், ஒரு சவரன் தாலிக்கு தங்கம் கொடுத்தாங்க. அதனை தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது. பொய் வாக்குறுதி அளித்த தி.மு.க.,விற்கு இத்தேர்தலில் பாடம் புகட்டிட, நம்ம ஊரு தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு ஓட்டு போட்டு வெற்றி செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர்கள் தேன்மொழிதேவநாதன், சுந்தரிமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாபுபுஷ்பராஜ், முன்னாள் நகர செயலாளர் சவுந்தர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

