ADDED : மே 30, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பள்ளி ஆசிரியரை காணவில்லை என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரியலுார் மாவட்டம், ஆண்டிமடத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி விக்டர், 49; கடலுார் திருப்பாதிரிபுலியூர் ஜெயின்ட் ஜோசப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, கடந்த 6 ஆண்டுகளாக தன்ராஜ் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து, சக ஆசிரியர் லுாயிஸ் என்பவருடன் தங்கியிருந்தார். பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த விக்டர், கடந்த 18ம் தேதி கடைக்கு சென்று வருவதாக சக ஆசிரியர் லுாயிஸிடம் கூறிவிட்டு சென்றவரை காணவில்லை. சொந்த ஊருக்கும் செல்லவில்லை.
இதுகுறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.