/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலையில் ஆசிரியர் தினம்
/
அண்ணாமலை பல்கலையில் ஆசிரியர் தினம்
ADDED : செப் 05, 2024 07:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா நடந்தது.
துணைவேந்தர் கதிரேசன் தலைமை தாங்கி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் பங்கேற்று, ஆசிரியர் தின விழா சிறப்புகள் குறித்து பேசினார். கல்வியியல் புல முதல்வர் குலசேகர பெருமாள் வரவேற்றார்.
விழாவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள், 30 ஆண்டுகளுக்கு மேல் கல்விப் பணி செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் நன்றி கூறினார்.
பி.ஆர்.ஓ., ரெத்தினசம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.