sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆசிரியர் தற்கொலை மிரட்டல் முதல்வர் விழா அருகே பரபரப்பு

/

ஆசிரியர் தற்கொலை மிரட்டல் முதல்வர் விழா அருகே பரபரப்பு

ஆசிரியர் தற்கொலை மிரட்டல் முதல்வர் விழா அருகே பரபரப்பு

ஆசிரியர் தற்கொலை மிரட்டல் முதல்வர் விழா அருகே பரபரப்பு


ADDED : பிப் 22, 2025 09:32 PM

Google News

ADDED : பிப் 22, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற மாநாடு அருகே, பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர் மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேரன்,59; வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் தனது பணியை நிரந்தரமாக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மாநாடு நடைபெற்ற திருப்பயர் அருகே உள்ள கண்டப்பங்குறிச்சி கிராமத்தில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சமாதானம் செய்ததை தொடர்ந்து, 7:15 மணிக்கு டவரில் இருந்து இறங்கினார். இச்சம்பவத்தினால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us