/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு போட்டிக்கு குழு அமைப்பு
/
விளையாட்டு போட்டிக்கு குழு அமைப்பு
ADDED : ஆக 01, 2024 06:39 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டுப் போட்டிகளுக்கு குழு நிர்ணய கூட்டம் நடந்தது.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் குறுவட்ட அளவில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளை, இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் நடத்திட சி.இ.ஓ., அனுமதி அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் குறித்து குழு நிர்ணய கூட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் லுார்து ஜெயசீலன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இன்பஜெயராஜ் வரவேற்றார். இடைநிலை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் வாழ்த்தி பேசினார். அதில், விளையாட்டுப் போட்டிகளை இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடத்திட குழு நிர்ணயம் செய்யப்பட்டது.