ADDED : ஜூலை 28, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார்.
புதுச்சத்திரம் அடுத்த தியாகவல்லி நடுத்திட்டை சேர்ந்தவர் நாகப்பன் மகன் வசந்தராஜா, 27; மீன்பிடி தொழில் செய்பவர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் சரண்ராஜ், 23; கலியன் மகன் மதிவாணன், 26 மூவரும், பைக்கில் புதுச்சத்திரம் நோக்கி வந்தனர். ஆலப்பாக்கம் அருகே வந்தபோது, எதிரில் வந்த மற்றொரு பைக் மோதியது.
இதில் படுகாயமடைந்த வசந்தராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சரண்ராஜ், மதிவாணன், பூவாணிக்குப்பத்தை சேர்ந்த விஜயகுமார், இளஞ்செழியன் நான்கு பேரும், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.