/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு '12 ஆண்டு'
/
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு '12 ஆண்டு'
ADDED : ஆக 08, 2024 12:19 AM

கடலுார்:
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை வாலிபருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.
திருவள்ளூர் மாவட்டம், கண்டபுரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மகன் நேதாஜி 28; சென்னையில் துணைிக் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு, கடந்த 2016ம் ஆண்டு, கடலுார் முதுநகரை சேர்ந்த வந்த 17 வயது சிறுமியுடன், மொபைலில் ராங் கால் செய்ததின் மூலம் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தந்தை வேலைக்கு சென்று விடுவார். இந்த சந்தர்ப்பை பயன்படுத்தி, கடலுார் வந்த வாலிபர் சிறுமியுடன் நெருங்கி பழகுவதாக நடித்து பலாத்காரம் செய்தார்.
பின், சிறுமியை ஆபாச படம் எடுத்தும் மிரட்டி வந்தார். தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையையும் மிரட்டினார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், கடலுார் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து நேதாஜியை கைது செய்து, கடலுார் போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணை செய்த நீதிபதி லட்சுமி ரமேஷ், நேதாஜிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜோதிரத்தினம் ஆஜரானார்.