நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் மாதவன், 23; ஐ.டி.ஐ., படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7ம் தேதி ஊரில் இருந்த மாதவன் தனது தாயிடம் இரு சக்கர வாகனம் வாங்கி தர கேட்டார். அதற்கு அவர், பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாதவன் வீட்டின் அறைக்கு சென்று துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் அய்யப்பன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.