
சேத்தியாத்தோப்பு: மது அருந்தியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் துாக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயச்சந்திரன், 21; பி.காம்., படித்த இவர், திருப்பூரில் ஜவுளி கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஜெயச்சந்திரன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால், வேதனையடைந்த ஜெயச்சந்திரன் பெரியகுப்பம் சுடுகாடு செல்லும் சாலையில் மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.