நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : மது குடிக்க தந்தை பணம் தர மறுத்ததால் மனமுடைந்த மகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராகுல்,21; இவர், கடலுார், முதுநகரில் வாடகை வீட்டில் தங்கி கூலித் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில், ராகுல் தனது தந்தையிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், மனமுடைந்த ராகுல் நேற்று வீட்டில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.