ADDED : செப் 03, 2024 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம், சோழன்நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை சோழன்நகர், பூங்கா பள்ளித்தெருவில் ரமேஷ் மகன் பிரவீன், 21, வீட்டில் சோதனை செய்தபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது.
பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து பிரவீனை கைது செய்து, அவரிடமிருந்து 135 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.