ADDED : ஆக 06, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பண்ருட்டி அடுத்த ஒறையூர் வாணியம்பாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் விக்னேஷ்வரன்,30; கூலி தொழிலாளி; இவருக்கு திருமணமாகவில்லை.இதனால் விரக்தியில் இருந்தஅவர், கடந்த 5 ம் தேதி விஷம் குடித்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்று உயிரிழந்தார்.
புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.