ADDED : மே 30, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவி காலனியை சேர்ந்தவர் விக்னேஷ், 25; ஆசாரி வேலை செய்து வந்தார். இவர், கடந்த 27ம் தேதி சேர்க்காம்பாளையத்திற்கு வேலைக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சேர்க்காம்பாளையம் வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி விக்னேஷ் கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷ், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.