/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
/
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
ADDED : ஆக 07, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் பாலமுருகன், 25. நேற்று முன்தினம் இரவு 11:.25 மணியளவில் பைக்கில், கர்னத்தம் - பில்லுார் பைபாஸ் சாலையில் சென்றார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது மனைவி சந்தியா, 23, புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.