/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெலுங்கானா பக்தரின் 4 சவரன் நகை மாயம்
/
தெலுங்கானா பக்தரின் 4 சவரன் நகை மாயம்
ADDED : செப் 01, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், : சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தெலுங்கானா பக்தரிடம், 4 சவரன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம், விக்கிரபாட் மாவட்டம், பக்ரி பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மனைவி ராதிகா, 40; குடும்பத்துடன், நேற்று முன்தினம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்து பார்த்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை காணவில்லை.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் அவர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குபதிந்து, நடராஜர் கோவிலில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.