/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுக்குப்பம் கிராமத்தில் 7 ஆண்டிற்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் கோவில் திருவிழா

ADDED : மே 04, 2024 06:57 AM
மரக்காணம் : மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் 7 ஆண்டிற்கு பின்போலீஸ் பாதுகாப்புடன் முருகன் கோவிலில் வேல் திருவிழா நடந்தது.
மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கும் இடையே 7 ஆண்டிற்கு முன் தகராறு ஏற்பட்டது. இதனால், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்த வருவாய் துறை தடை விதித்தது.
இதனால், நடுக்குப்பம் கிராமத்தில் கடந்த 7 ஆண்டாக எந்த திருவிழாவும் நடத்தப்படவில்லை.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது ஒரு தரப்பினர் கோவில் திருவிழா தடையை நீக்க வேண்டிதேர்தலை புறக்கணித்தனர். அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடுக்குப்பம் கிராம முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்,சமரசம் ஏற்பட்டதால் மாலை 3:00 மணிக்கு மேல் பொதுமக்கள் ஓட்டு போட்டனர்.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில், சில கட்டுப்பாடுகளுடன் முருகன் கோவிலில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. அதன் பின் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேல் பூஜை நடந்தது.
ஏழு ஆண்டிற்கு பிறகு நடந்த வேல் பூஜை விழாவில்கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.
பக்தர்கள்காவடிஎடுத்தும், அலகு போட்டு டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.