ADDED : மார் 28, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி கடந்த 25 ம் தேதி காலை கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கியது. இரவு 7.00 மணிக்கு முதற்கால யாகபூஜை நடந்தது. 26ம் தேதி காலை இரண்டாம்கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனையும் மாலை 6:00 மணிக்கு மூன்றாம்கால யாகபூஜை நடந்தது. கும்பாபிேஷக தினமான நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, ரக்ஷாபந்தனம், தத்துவார்ச்சனையும் சரியாக 9:30 கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.