ADDED : மார் 25, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆல்ஃபா ஓவிய பயிற்சி பள்ளி சார்பில் கோவில் சிற்பங்களை வரையும் போட்டி நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த பயிற்சிக்கு, நிறுவனர் முருகன் தலைமை தாங்கினார். அதில், கோவில் சிற்பங்கள், அதன் நுணுக்கங்களை நேரடியாக பார்த்து வரையும் போட்டி நடந்தது. ஏஜிபி பிரிமியர் நிறுவனர் அன்வர் பாஷா, நல்லாசிரியர் வீரராகவன், குறிஞ்சிசெல்வன் ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்து, மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். ஓவியர் சுரேஷ், இந்தி ஆசிரியர் ராஜலட்சுமி உட்பட பெற்றோர் உடனிருந்தனர்.

