/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் திருவிழாவிற்கு எதிர்ப்பு பண்ருட்டி அருகே பதற்றம்
/
கோவில் திருவிழாவிற்கு எதிர்ப்பு பண்ருட்டி அருகே பதற்றம்
கோவில் திருவிழாவிற்கு எதிர்ப்பு பண்ருட்டி அருகே பதற்றம்
கோவில் திருவிழாவிற்கு எதிர்ப்பு பண்ருட்டி அருகே பதற்றம்
ADDED : ஆக 22, 2024 02:32 AM

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த மேலிருப்பு தெற்கு தெருவில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதில், 1996ம் ஆண்டு இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால், விழா நடத்தப்படாமல் இருந்தது. பின், 2016ல் இரு தரப்பினரும் சுமுகமாக பேசி, விழாவை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழாவில் முதல் நாள் உற்சவத்தை பொது விழாவாக நடத்த, ஒன்றிய கவுன்சிலர் தனபதி கூறினார். அதற்கு, முன்னாள் ஊராட்சி தலைவர் ேஹமமாலினிபாபு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, பாரம்பரியப்படி, முதல் நாள் உற்சவத்தை நாங்கள் தான் நடத்துவோம் என்றதால் மீண்டும் இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் கோவில் திருவிழாவை நடத்த தாசில்தார் தடை விதித்தார்.
இதுதொடர்பாக, ஒன்றிய கவுன்சிலர் தனபதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் நாள் உற்சவத்தை அனைத்து தரப்பினரும் இணைந்து நடத்தவும், விழாவிற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி, கோவில் திருவிழாவிற்கு 17ம் தேதி நடந்த பந்தகால் நடும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் ஊராட்சி தலைவர் தரப்பினர் கருப்பு கொடி காட்டியதால் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே, நேற்று, முதல் நாள் உற்சவமான கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.