/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.78 லட்சத்தில் தார் சாலை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.78 லட்சத்தில் தார் சாலை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.78 லட்சத்தில் தார் சாலை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.78 லட்சத்தில் தார் சாலை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 18, 2024 05:37 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே 78.70 லட்சம் ரூபாயில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுப் பணியை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பாங்குளம் முதல் காட்டுக்கூடலுார் வரையிலான இணைப்பு சாலை பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வந்தனர்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 78.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நேற்று பூமி பூஜையுடன் பணிகள் துவங்கப்பட்டன.
இதனை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கம்மாபுரம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, காங்., வட்டார தலைவர் சாந்தகுமார், ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி அரங்கநாதன், பொறியாளர் சண்முகம் உட்பட கிராம மக்கள் உடனிருந்தனர். முன்னதாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.