/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களுடன் முதல்வர் முகாம் 1,370 மனுக்கள் குவிந்தது
/
மக்களுடன் முதல்வர் முகாம் 1,370 மனுக்கள் குவிந்தது
மக்களுடன் முதல்வர் முகாம் 1,370 மனுக்கள் குவிந்தது
மக்களுடன் முதல்வர் முகாம் 1,370 மனுக்கள் குவிந்தது
ADDED : செப் 01, 2024 06:12 AM

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த பாலுாரில் மக்களுடன் முதல் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
பண்ருட்டி தாசில்தார் ஆனந்த் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் முருகன், ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தாரணி பார்த்திபன் வரவேற்றார். அண்ணாகிராம தி.மு.க.,ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் துவக்கி வைத்தார்.முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், விவசாயிகளுக்கு இடு பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
முகாமில் பாலூர், நத்தம், சுந்தரவாண்டி, கீழ்அருங்குணம், எய்தனூர், பல்லவராயநத்தம், சன்னியாசி பேட்டை பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 1370 மனுக்கள் பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் பலராமன், ஒன்றிய பொருளாளர் ஸ்ரீதர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராமர், ஆறுமுகம், உமையாள் ஆறுமுகம்,மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.