/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மர்ம பொருள் வெடித்ததில் பசுவின் வாய் கிழிந்தது
/
மர்ம பொருள் வெடித்ததில் பசுவின் வாய் கிழிந்தது
ADDED : மார் 24, 2024 04:22 AM
திட்டக்குடி: ராமநத்தம் அருகே மர்ம பொருள் வெடித்ததில் பசுமாட்டின் வாய் கிழிந்து படுகாயம் அடைந்தது.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி ஜானகி, 55; இவருக்குச் சொந்தமான மூன்று மாடுகள் நேற்று மாலை அருகில் உள்ள ஏரிக்கரையில் மேய்ந்தன.
அப்போது புற்களை மாடு கடித்தபோது, அதனுடன் இருந்த மர்ம பொருட்டி திடீரென வெடித்தது. அதில், ஒரு பசுமாட்டின் வாய் முற்றிலுமாக கிழந்து படுகாயமடைந்தது.
மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாட வைத்த வெடி, வெடித்து மாடு காயமடைந்துள்ளதாக கூறிய அப்பகுதி மக்கள், இதுகுறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

