/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு ஐ.டி.ஐ.,களில் சேர்க்கை 16ம் தேதி வரை அவகாசம்
/
அரசு ஐ.டி.ஐ.,களில் சேர்க்கை 16ம் தேதி வரை அவகாசம்
ADDED : ஆக 07, 2024 06:28 AM
கடலுார் : அரசு ஐ.டி.ஐ.,களில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம், வரும் 16ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் கடலுாரில் மகளிர் ஐ.டி.ஐ., உட்பட கடலுார், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களூர், நெய்வேலியில் அரசு ஐ.டி.ஐ.,க்கள் (தொழிற்பயிற்சி நிலையம்) செயல்படுகிறது.
இங்கு, காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்கள் நேரடி சேர்க்கை கால அவகாசம் வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பயிற்சியில் சேர விண்ணப்ப கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
அரசு ஐ.டி.ஐ.,யில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித் தொகை, விலையில்லா சைக்கிள், புத்தகம், காலணி, சீருடை, வரைப்படக் கருவி வழங்கப்படுகிறது. தமிழ் புதல்வன் திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
மாறிவரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்நுட்ப மையங்களாக உயர்த்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு செய்து தரப்படும்.
எனவே, ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.