/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் வசதி செய்து தர நரிக்குறவர்கள் கோரிக்கை
/
குடிநீர் வசதி செய்து தர நரிக்குறவர்கள் கோரிக்கை
ADDED : ஆக 18, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : கீரப்பாளையம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள், குடிநீர் கேட்டு பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
புவனகிரி அருகே கீரப்பாளையம் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்பில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியினர் குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை நறிக்குறவர்கள் கூட்டமாக, கீரப்பாளையம் பி.டி.ஓ., அலுவலகம் வந்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மனு அளித்தனர்.