/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சப்வே அமைக்கும் பிரச்னை பேச்சுவார்த்தை தோல்வி
/
சப்வே அமைக்கும் பிரச்னை பேச்சுவார்த்தை தோல்வி
ADDED : ஜூலை 10, 2024 04:31 AM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே நான்கு வழிச்சாலையில் சப்வே அமைக்கும் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
விழுப்புரம்- நாகை இடையிலான நான்கு வழிச்சாலையில், சிதம்பரம் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் சப்வே கேட்டு, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேற்று முன்தினம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று சப் கலெக்டர் ராஷ்மிராணி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏ.எஸ்.பி., ரகுபதி, புவனகிரி தாசில்தார் தனபதி, நகாய் அதிகாரிகள், தீத்தாம்பாளையம் ஊராட்சி தலைவர் லோகநாதன், மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின்போது, கடந்த 6 மாதமாக கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
மேலும் தற்போது போடப்பட்டுள்ள சுரங்கப்பாதையை மேலும் ஒரு அடி உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆனாலும் நகாய் அதிகாரிகள் எவ்வித சம்மதமும் தெரிவிக்காததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.