நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே வீட்டில் இருந்த சிறுமி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி, திருவதிகையைச் சேர்ந்தவர் பாபு மகள் கீர்த்தனா, 17; இவர் புதுப்பேட்டை அடுத்த பண்டரக்கோட்டையில் உள்ள தனது பாட்டி கவுரி வீட்டில் தங்கியிருந்தார். கீர்த்தனாவை கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கவுரி அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

