ADDED : செப் 09, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே சீர்வரிசை செய்வது சம்மந்தமாக ஏற்பட்ட தகராறில் தாய்மாமனை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பரிசமங்களம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி,36;இவரது மாமனார் செங்கேணி,61; இவருக்கும் கீழ் அருங்குணத்தை சேர்ந்த இவரது தங்கை தனவள்ளி மகன் பரமசிவத்திற்குமிடையே சீர்வரிசை செய்வது சம்மந்தமாக பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில் பரமசிவம்,இவரது மனைவி சவிதா,தாய் தனவள்ளி,உறவினர் கலியன் ஆகிய 4 பேரும் செங்கேணியின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம், சவிதா, தனவள்ளி,கலியன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து பரமசிவத்தை,41;கைது செய்தனர்.