ADDED : ஜூலை 08, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே அழிச்சிக்குடி வெள்ளாற்றில் மணல் திருடியவரை கைது செய்து, தப்பியோடிவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி வெள்ளாற்றில் நாளாந்தெத்து மாரியம்மன் கோவில்தெருவைச் சேர்ந்த ராஜவேல் மற்றும் ராஜரத்தினம் இருவரும் ராஜவேல் கட்டி வரும் வீட்டிற்காக மணல் கடத்துவதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கிருந்து இருவரும் தப்பியோடினர்.
ராஜவேல்,42; போலீசாார் கைது செய்து, தலைமறைவாக உள்ள ராஜரத்தினத்தை போலீசார் தேடி வருகின்றனர்.