/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காதலியை திருமணம் செய்ய மறுத்து மிரட்டல் விடுத்தவர் கைது
/
காதலியை திருமணம் செய்ய மறுத்து மிரட்டல் விடுத்தவர் கைது
காதலியை திருமணம் செய்ய மறுத்து மிரட்டல் விடுத்தவர் கைது
காதலியை திருமணம் செய்ய மறுத்து மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : மே 05, 2024 03:54 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம் அடுத்த பெருவருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் பழனிசாமி, 40; இவர், வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த 29 வயது பெண்ணை கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார்.
இருவரும் நெருங்கிப் பழகியதில் அந்த பெண் 2019ம் ஆண்டு கர்ப்பமானார். அப்போது, கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்ளவதாக பழனிச்சாமி கூறியவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்தி வந்தார்.
அந்த பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பழனிசாமியின் பெற்றோர் மற்றும் உறவினர் சக்திவேல் ஆகியோர், அந்த பெண்ணைத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், பழனிசாமி, சக்திவேல் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பழனிசாமியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சக்திவேலை தேடி வருகின்றனர்.