/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைப் பட்டா கேட்டு மா.கம்யூ., போராட்டம்
/
மனைப் பட்டா கேட்டு மா.கம்யூ., போராட்டம்
ADDED : ஆக 23, 2024 12:37 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இலவச மனைப்பட்டா கேட்டு மா.கம்யூ., சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
விருத்தாசலம் தாலுகா கோ.பொன்னேரி, சேப்ளாநத்தம், ஊமங்கலம், சின்னவடவாடி, புலியூர், இருளக்குறிச்சி, கோ.ஆதனுார், பெருந்துறை, புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இலவச மனைப்பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதைக் கண்டித்து மா.கம்யூ., சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. வட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாநில துணைத் தலைவர் ஜீவானந்தம், ஒன்றிய அமைப்பாளர்கள் குமரகுரு, இளங்கோவன், சுந்தரவடிவேல் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில், பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக வந்து, தாலுகா அலுவலக வளாகத்தில் மனைப்பட்டா கோரி கோஷமிட்டனர். பின்னர், தாசில்தார் உதயகுமாரிடம் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.

