நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : வீட்டில் தனியாக இருந்த முதியவர் இறந்துகிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புவனகிரி அடுத்த எல்லைக்குடியை சேர்ந்தவர் ராமர், 67; உடல்நிலை சரியில்லாதவர். இவர் தனது மனைவி சகுந்தலா என்பவருடன் கடலுார் பாதிரிக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி சகுந்தலா சென்னையில் தனது மகன் வேல்முருகன் என்பவரை பார்க்க சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது, ராமர் இறந்துகிடந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.