/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நரியன்ஓடை தடுப்பு சுவர் உடைந்ததால் பொதுமக்கள் அச்சம்
/
நரியன்ஓடை தடுப்பு சுவர் உடைந்ததால் பொதுமக்கள் அச்சம்
நரியன்ஓடை தடுப்பு சுவர் உடைந்ததால் பொதுமக்கள் அச்சம்
நரியன்ஓடை தடுப்பு சுவர் உடைந்ததால் பொதுமக்கள் அச்சம்
ADDED : செப் 09, 2024 05:28 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நரியன்ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி யாதவர் வீதிக்கு தடுப்பு சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையில் நரியன்ஓடை உள்ளது.இந்த ஓடை கிராம வரைபடத்தில் 50 மீட்டர் அகலத்திற்கு மேல் உள்ளது.ஆனால் இந்த ஓடை பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இதனால் தற்போது அதன் அளவு மிக குறுகிவிட்டது. நரியன்ஓடை கரையில் உள்ள யாதவர் வீதியில் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.தடுப்பு சுவர் கட்டிய சில மாதங்களிலேயே ஒன்றிய அதிகாரிகள் வாய்காலை ஆழப்படுத்தினர்.அப்போது வாய்க்காலில் மழைநீர் அதிகரித்ததால் தடுப்பு சுவர் இடிந்தது.
மழைகாலத்தில் பெருக்கெடுத்து வரும் நீர் வாய்க்காலின் நடுவில் ஓடாமல் யாதவர் வீதியையொட்டி ஓடுவதால் மழைநீர் தடுப்பு சுவரில் மோதி வருகிறது.மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய பொதுநிதியில் மீண்டும் கான்கிரிட் தடுப்பு சுவராக கட்டப்பட்டது.இந்த தடுப்பு சுவரிலும் மழைநீர் மோதியதில் தடுப்பு சுவர் இடிந்துவிட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மழைகாலத்தில் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.ஆகையால் கடலுார் ஒன்றிய அதிகாரிகள் மழைநீர் வாய்காலில் நடுவில் ஓடுவது போல் வாய்க்காலை சரி செய்து,இந்த தடுப்பு சுவரை புதியதாக கட்ட எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.