/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலம் கட்டும் பணி 'கிடப்பில்' தாழநல்லுார் மக்கள் அவதி
/
பாலம் கட்டும் பணி 'கிடப்பில்' தாழநல்லுார் மக்கள் அவதி
பாலம் கட்டும் பணி 'கிடப்பில்' தாழநல்லுார் மக்கள் அவதி
பாலம் கட்டும் பணி 'கிடப்பில்' தாழநல்லுார் மக்கள் அவதி
ADDED : மே 30, 2024 05:23 AM

பெண்ணாடம்: தாழநல்லுாரில் பெரிய ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் கடும் அவதியடைகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த தாழநல்லுாரில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ரயில் நிலையம் செல்லும் சாலையை பயன்படுத்தி காலனி பகுதி மக்கள் குடியிருப்புகளுக்கும் மற்றும் ரயில் நிலையம், விவசாயிகள் விளைநிலங்களுக்கு சென்று வந்தனர். மழை காலங்களில் பெரிய ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கும். இப்பகுதி மக்கள் ஓடையின் குறுக்கே பாலம் கட்ட பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, கடந்தாண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கியது. பாலத்தையொட்டி போக்குவரத்து வசதிக்காக மண் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், பாலப்பணி முடிந்த நிலையில் இருபுறமும் உள்ள சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் இப்பகுதி மக்கள் ரயில் நிலையம், விளைநிலங்களுக்கு செல்வோர்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்வோர் கடும் அவதியடைகின்றனர்.
எனவே, கிடப்பில் போடப்பட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.