/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்த மக்களால் பரபரப்பு
/
ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்த மக்களால் பரபரப்பு
ADDED : ஆக 06, 2024 07:00 AM

கடலுார் : கோவில் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து கிராம மக்கள் ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் புதுச்சத்திரம் கிராம மக்கள் ரேஷன் கார்டு ஒப்படைக்க திரண்டு வந்தனர். இவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகளிடம் கிராம மக்கள் அளித்த மனு: புதுச்சத்திரம் கிராமத்தில் ரேணுகாம்பிகை கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார். தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.