/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணம்தவிழ்ந்தபுத்துார் கோவிலில் மாப்பிள்ளை வரவேற்பு ஐதீக நிகழ்வு
/
மணம்தவிழ்ந்தபுத்துார் கோவிலில் மாப்பிள்ளை வரவேற்பு ஐதீக நிகழ்வு
மணம்தவிழ்ந்தபுத்துார் கோவிலில் மாப்பிள்ளை வரவேற்பு ஐதீக நிகழ்வு
மணம்தவிழ்ந்தபுத்துார் கோவிலில் மாப்பிள்ளை வரவேற்பு ஐதீக நிகழ்வு
ADDED : மார் 09, 2025 05:38 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் கைலாநசுவாமி கோவிலுக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாப்பிள்ளையாக வருகை தரும் ஐதீக நிகழ்வு நடந்தது.
திருநாவலுார் ஆளாள சுந்தரமூர்த்தி சுவாமிகள் கோவிலில் இருந்து, ஐ தீக முறைப்படி உற்சவர் சுந்தரமூர்த்தி சுவாமி நேற்று ஊர்வலமாக, பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தப்புத்துார் கைலாசநாத கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்தார்.
உற்சவர் ஆளாள சுந்தரமூர்த்தி மாப்பிள்ளை கோலத்தில் வருகை நிகழ்வு, பெண் வீட்டார் விருந்து நடந்தது. இன்று (9ம் தேதி) காலை கைலாசநாதர் சுவாமி கோவிலில் திருமண பந்தலில் சிவபெருமான் கிழவேதியராக எழுந்தருளி ஒலைகாட்டி திருமணத்தை தடுத்தல் நிகழ்வும்.
மணம்தவிழ்ந்தபுத்துாரில் இருந்து திருவெண்ணைநல்லுார் வழக்காடு மன்றத்திற்கு வழக்குரைக்க நடைபயணம், அங்கு வழக்காடுதல், சிவபெருமான் காட்சியளித்தல், பித்தா பிறைசூடி பதிகம் பாடுதலுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.