ADDED : மே 28, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், : சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை சார்பில் சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு உதவி வழங்கப்பட்டது.
சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நடனசபாபதி தலைமை தாங்கினார். ஜெயின் அறக்கட்டளை செயலாளர் தீபக்குமார் முன்னிலை விகித்தார். சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி, 15 சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடை உள்ளிட்ட உதவிகள் வழங்கினார்.
சங்க தலைவர் கமல் கிஷோர், சங்க மூத்த உறுப்பினர்கள் விஸ்வநாதன், பன்னாலால் ஜெயின், ஜெயபாண்டியன், கேசவன், புகழேந்தி, இந்தர், ஜினேந்தர், சஞ்சீவிகுமார், பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.