ADDED : மார் 06, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் தேர்களுக்கு வண்ணம் பூசும் பணி நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிறமோற்சவம் கடந்த 3ம் தேதி துவங்கியது. விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். வரும் 11ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 5 தேர்களில் விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சுவாமி, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
அதையொட்டி, கடந்த ஒரு மாதமாக, 5 தேர்களின் கட்டுமான பணி நடந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தேர்களுக்கு வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.