ADDED : மே 02, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : மேல்புவனகிரி புதுத்தெருவை சேர்ந்தவர் வனரோஜா, திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ். இருவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் சங்கரநாராயணன், விக்னேஸ்வரன், முருகன் ஆகியோர், வனரோஜா வீட்டிற்குள் புகுந்து அவரது மகன் தினேஷ் என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார், மகேஷ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.