/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாட்டின் மீது மோதி ரயில் நடு வழியில் நிறுத்தம்
/
மாட்டின் மீது மோதி ரயில் நடு வழியில் நிறுத்தம்
ADDED : ஆக 31, 2024 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே மாட்டின் மீது மோதிய ரயில் நடு வழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரத்தில் இருந்து நேற்று மதியம் 2:25 மணிக்கு மயிலாடுதுறை பயணிகள் ரயில் புறப்பட்டது. மாலை 3:20 மணிக்கு கடலுார் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்று பாலத்தில் வந்த போது, குறுக்கே வந்த எருமை மாட்டின் மீது ரயில் மோதியது. அதில், மாடு ரயில் இன்ஜினில் சிக்கிக் கொண்டதால், ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
கடலுார் ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இன்ஜினில் சிக்கிய மாட்டை அகற்றினர். அதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 4:30 மணிக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.