/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்காலில் வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு
/
வாய்க்காலில் வேன் கவிழ்ந்ததால் பரபரப்பு
ADDED : மே 08, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அடுத்த தலைக் குளம் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று, திரும் பிக் கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு புவனகிரி அடுத்த உடையூர் அருகே எதிர்பாராத விதமாக, டிரைவரின் கட்டுப்பட்டையிழந்து அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் வேன் கவிழ்ந்தது. தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வேனில் சிக்கியவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்தவர்கள் உயிர்த்தப்பினர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மருதுார் போலீசார் நேரில் விசாரித்தனர்.

