/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையை அடைக்க கிராம மக்கள் எதிர்ப்பு புதுச்சத்திரம் அருகே பரபரப்பு
/
சாலையை அடைக்க கிராம மக்கள் எதிர்ப்பு புதுச்சத்திரம் அருகே பரபரப்பு
சாலையை அடைக்க கிராம மக்கள் எதிர்ப்பு புதுச்சத்திரம் அருகே பரபரப்பு
சாலையை அடைக்க கிராம மக்கள் எதிர்ப்பு புதுச்சத்திரம் அருகே பரபரப்பு
ADDED : ஏப் 30, 2024 05:55 AM

புதுச்சத்திரம்: நான்கு வழிச்சாலையில் புதுச்சத்திரம் அருகே, சாமியார்பேட்டை செல்லும் சாலையை அடைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், புதுச்சத்திரம் அருகே சாமியார்பேட்டை செல்லும் சாலையை அடைக்க, சாலை அமைக்கும் நிறுவனம் கடந்த 2 ம் தேதி முயற்சித்தது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பால் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சாலையை அடைக்க வந்தனர்.
தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிலம்பிமங்களம் பஸ் நிறுத்தம் அருகே திரண்டு, சாலையை அடைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சாலை மறியல் செய்யவும் முயன்றனர்.
புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா, பரங்கிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவெடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.