/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு இளைஞரணி அமைப்பாளர் நன்றி
/
தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு இளைஞரணி அமைப்பாளர் நன்றி
தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு இளைஞரணி அமைப்பாளர் நன்றி
தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு இளைஞரணி அமைப்பாளர் நன்றி
ADDED : ஜூன் 08, 2024 05:46 AM

விருத்தாசலம் லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெறுவதற்காக உழைத்த இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் ஓட்டு போட்ட மக்களுக்கு தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகம் மற்றம் புதுவை உள்ளிட்ட 40 இடங்களில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெற்றி பெற, மகளிர் நலத்திட்ட உதவிகள், உரிமை தொகை திட்டம், மகளிருக்கு இலவச பஸ் வசதி, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ஆகியவைகள் முக்கிய பங்கு வகித்தன.
முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வியூகத்தினால் நல்ல பலன் கிடைத்துள்ளது.
மேலும், 'களத்தில் இளைஞரணி' என்ற குழுவை, மாநில இளைஞரணி செயலர் அமைச்சர் உதயநிதி உருவாக்கி தேர்தல் பணிகளை பிரித்துக் கொடுத்ததால், எங்களுக்கு தேர்தல் பணி செய்ய எளிமையாக இருந்தது.
இந்த லோக்சபா தேர்தலில், கடலுார் தொகுதியில் கூட்டணி கட்சி வெற்றி பெற ஆலோசனை வழங்கிய மாவட்ட செயலர் அமைச்சர் கணேசன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் ஓட்டு போட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இளைஞரணி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.