/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் திருட்டு
ADDED : செப் 04, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம், மணலுார் தமிழ் நகரைச் சேர்ந்தவர் துரை,63; இவர் கடந்த 30ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் திருக்கோவிலுாரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.