/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவிலில் நகைகள் திருட்டு; ஆவினங்குடி போலீசார் விசாரணை
/
கோவிலில் நகைகள் திருட்டு; ஆவினங்குடி போலீசார் விசாரணை
கோவிலில் நகைகள் திருட்டு; ஆவினங்குடி போலீசார் விசாரணை
கோவிலில் நகைகள் திருட்டு; ஆவினங்குடி போலீசார் விசாரணை
ADDED : செப் 15, 2024 06:57 AM

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த மேலுார் மலையப்பர் சுவாமி கோவிலில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திட்டக்குடி அடுத்த மேலுார் கிராமத்தில் மலையப்பர் சுவாமி கோவில், காட்டுப்பகுதியில் உள்ளது.
இக்கோவிலின் நகைகள் மற்றும் சுவாமிக்கு அணிவிக்கும் வெள்ளி கிரீடம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை அணிவிக்கப்பட்டு, மாலை பாதுகாப்பாக அய்யனார் கோவிலில் வைக்கப்படும்.
வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை, மலையப்பர் சுவாமிக்கு கண்மலர், ருத்ராட்சம், நெற்றிப்பட்டை ஆகிய நான்கு சவரன் நகைகள் மற்றும் வெள்ளி கிரீடம் இரண்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது.
அதே ஊரைச் சேர்ந்த கோவில் பூசாரிகளான முத்துசாமி, 88, கோவிந்தசாமி, 95, ஆகியோர் பூஜைகளை செய்தனர். காலை 10.30மணியளவில் அங்கு வந்த வாலிபர்கள் இரண்டு பேர், பூசாரிகள் அசந்த சமயத்தில் நகைகளை திருடிச்சென்றனர்.
மதியம் 2:00 மணியளவில் சாமி கும்பிட வந்த அதே ஊரைச்சேர்ந்த வேலாயுதம்,51, என்பவர் நகைகளை இல்லாததை கண்டு பூசாரிகளிடம் கேட்டார்.
அதன் பிறகே நகைகள் காணாமல்போனது கண்டு பூசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நேற்று ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் ஆவினங்குடி சப் இன்ஸ்பெக்டர் சுபிக் ஷா மற்றும் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். காணாமல் போன நகைகளின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும்.