ADDED : ஆக 07, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தில் பாஸ்கர ஈஸ்வரர் கோவில், அதன் அருகே லஷ்மிநாராயணன் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு பத்ரி நாராயணன் பட்டாச்சாரியார் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது இரண்டு கோவில்களின் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பாஸ்கர ஈஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து 8 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.