/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமாரக்குடி வளைவு பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்
/
குமாரக்குடி வளைவு பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்
குமாரக்குடி வளைவு பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்
குமாரக்குடி வளைவு பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயம்
ADDED : மே 27, 2024 05:54 AM

சேத்தியாத்தோப்பு: குமாரக்குடி குறுகிய வளைவில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
சென்னை - கும்பகோணம் சாலை சேத்தியாத்தோப்பு வழியாக செல்கிறது. இச்சாலையில் குமாரக்குடியில் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளாற்றுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலின் குறுக்கே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், குறுகிய வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வழியாக சென்னை, கும்பகோணம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ், கார், லாரிகள் என 24 மணி நேரமும் வாகனங்கள் செல்கின்றன. தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் குறுகிய பாலத்தில் எதிரே வாகனங்கள் கடந்து செல்லமுடிவதில்லை. கனரக வாகனங்கள், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. பாலத்தின் தடுப்பு சுவரும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. சிதம்பரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலத்தினை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.